அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியைஅறிவித்ததை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் முருகன் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். முருகனுக்கு முன்பே பலர் முதலமைச்சர் வேட்பாளரை வாழ்த்த வரிசையில் அமைச்சர் கள், அதிமுக நிர்வாகிகள், திரையுலக பிரமுகர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டிருக்கிறார்களாம்
இது ஒருபக்கமிருக்க சட்டமன்றத் தேர்தல் பேச்சு வார்த்தைகள் பேரங்கள் வெகுவேகமாக நடந்து கொண்டிருக்கின்றன எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்காக வாழ்த்து தெரிவிக்காத பாமகவினர், அதன் இளைஞரணி தலைவர் அன்புமணியை ஏன் துணை முதலமைச்சர் ஆக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்
அதிமுகவிடம் அதிக சீட்டு கேட்டு பாஜக நெருக்கடி கொடுக்குமோ இல்லையோ பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் நீண்ட பேரங்களை நடத்தும் என்கிறார்கள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களை விட கூட்டணி கட்சியினரை சமாளித்தால் சாதனை படைத்தால் போதும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது ரொம்ப ஈசி என்கிறார்கள் அதிமுகவினர்மகள்