உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஒளியேந்தி கவர்னர் மாளிகை நோக்கி நாளை கனிமொழி தலைமையில் மகளிர் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'கொராேனோ ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீடிக்கிறது. அதன்படி 5 பேருக்குமேல் கூட்டமாக கூடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக மகளிர் பேரணிக்கு காவல் துறை அனுமதிக்க வாய்ப்பில்லை எனவே நாளை தடை மீறும் பட்சத்தில் கனி
மொழி உள்பட திமுக மகளிர் அணியினர் கைதாக வே வாய்ப்பிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன