என் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம்

என் பிறந்தநாளில் ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ள


நவம்பர்


27 ம்தேதி என் பிறந்தநாளை கொண்டாட தமிழகம் முழுவதும் இளைஞரணியிரும் கழகத்தினரும் கொண்டாட தயாராகி வருகிறீர்கள். உங்கள் மாசற்ற அன்பை நான் அறிவேன். இது பேரிடர் காலம். பேரிடர் காலத்தில் மக்களுக்குஉதவிக்கரம் நீட்டுவதும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதும் தான் உண்மையான கொண்டாட்டம். ஆடம்பர பேனர்கள் வைப்பது சுவரொட்டிகள் ஒட்டுவது கொண்டாட்டங்களை தவிர்த்து கனமழையால் புயலால் பாதிக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள் மற்ற பகுதிகளில் ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்துங்கள் என்று உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்