7 மாவட்டங்களில் பேருந்துகள் ரத்து


நிவர் புயல் கரையை கடப்பதையடுத்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட 7மாவட்டங்களில் நாளை மாலை முதல்்பேருந்துகள் நிறுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அறிவித்துள்ளார்.


இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 


அறிக்கை


வங்க் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் 25 ம் தேதிஅன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது


புதிதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி,24ம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25ந்தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும்போது, மிக  கனமழையுடன் 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்


புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்புஅலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டும்.


பாதிப்பு உள்ளாக கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாதவீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகநிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்குஇடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.


பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிரமற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.


 


இதற்கிடையே  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறுகையில்்்்ஷ


வேண்டாம் செல்ஃபி 


காற்றழுத்தத தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தீவிர புயலாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே நீரோட்டம் மிகுந்த இடங்களில் இளைஞர்கள் தங்களது வீரத்தை காட்ட வேண்டாம் என்றும்  நீர்நிலைகள் உள்ள  பகுதிகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் துணி துவைக்கவோ கால்நடைகளை சுத்தம் செய்யவோ வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பாக ஆறுகள் குளங்கள் ஏரிகள் போன்றவற்றின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் த