அமீத் ஷாவுக்கு திமுக அடுக்கடுக்கான கேள்விகள்

 


 


திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி.,வெளியிட்ட அறிக்கைகேள்வி.


மத்திய அரசில் இருந்த போது தி.மு.க. தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன?” என்று  மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா கேட்டிருக்கிறார். அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால் - நேருக்கு நேர் மேடை அமைத்து - . அமித்ஷா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச முடியும். என்று சென்னைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வந்தது உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை பட்டியலிட்டார்


விவசாயிகளின் கடன்களையே தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி வருகிறது பா.ஜ.க. அரசு. ஆனால் ரூ.72,000 கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க. பங்கேற்றிருந்த போதுதான் ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு - அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது எ


தமிழ் நாட்டிற்கு நிதியை வாரி வழங்கி விட்டதாகக் கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சர். நான் அவரிடம் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 15-ஆவது நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தீர்த்து வைத்து விட்டீர்களா? கொரோனாவிற்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் வாங்க அ.தி.மு.க. அரசு கேட்ட நிதியைக் கொடுத்து விட்டீர்களா? ஜி.எஸ்.டி. மூலம் இதுவரை தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு? அதில் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செலவிட்டது எத்தனை கோடி? வட மாநிலங்களுக்கு வாரிக் கொடுத்தது எவ்வளவு கோடி? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு - ஏதோ “பட்டாணி” கொடுப்பது போல் சில உதவிகளைச் செய்து விட்டு உள்துறை அமைச்சராக இருப்பவரே இப்படிப் பேசுவது மிகுந்த வேதனைக்குரியது.உண்மை என்னவென்றால் இன்றைக்குத் தமிழ்நாடுதான் மத்திய அரசுக்கும் - வட மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறது!


 


ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு - மத துவேஷம் உருவாக்குவது - சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டிற்குச் செய்து வருகிறது.


இதை தவிர தமிழகத்திற்கு நீங்கள் செய்த சாதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே