தீபாவளி கவனிப்பில் போட்டா போட்டி

வரும் மே மாதம் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது . தேர்தலில் தொண்டர்களை பல வழிகளில் அதிமுக தயாராக்கி வருகின்றது அதற்காக  தொண்டர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி  கவனித்து வருகின்றனர். மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தனது சொந்த தொகுதியில் உள்ள தொண்டர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் 25 கிலோ அரிசி மூட்டையையும் வாரி வழங்கினார்  இதே போல பல மாவட்ட செயலாளர்களும் தொண்டர்களை கவனித்து வருகின்றனர். இதில் அமுமுகவும் விதிவிலக்கல்ல.


வடசென்னை தெற்கு மாவட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் துணை செயலாளர் சி.பி.ராம ஜெயம் ஆகியோர் அக்கட்சியின் வட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 பேரை அழைத்து ஸ்வீட் பாக்ஸ் , புத்தாடைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளனர் 


இந்த போட்டா போட்டியில் திமுக நிர்வாகிகள் நிலை தான் பரிதாபம் . அவர்களுக்கு தமிழர் திருநாள் பொங்கல் தான் என்று ஆறுதல் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எங்களுக்கு பொங்கலுக்கும்  போனஸ் உண்டு என்று அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் மார்தட்டிக் கொண்டிருக்கின்றனர்