மூழ்கும் கப்பலின் கேப்டன்கள்

மூழ்கும் கப்பலில் கேப்டன் பதவிக்கு போட்டி நடைபெறுவதாக அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் நடைபெறும் போட்டி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கிண்டல் அடித்துள்ளார்


 


இது குறித்து தீக்கதிர. நாளிதழில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை வருமாறு


 


அதிமுக செயற்குழு கூட்டம் 5 மணிநேரம் நடந்திருக்கிறது, ஆளுங்கட்சியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்னைகளை பற்றி விவாதிப்பதற்கு பதிலாக அது சார்ந்த தீர்மானங்களை விரிவாக ஆலோசிப்பதற்கு பதிலாக முழுக்க முழுக்க பதவிக்கான சண்டையே நடந்துள்ளது,வரும் சட்டமன்றத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இந்த கூட்டத்திலேயே தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தொடக்க ஆட்டக்காரர் போல தொடங்கிவைத்துள்ளார், அமைச்சர்கள் பேசியதை விட முதல்வரும் துணைமுதல்வரும் நேரடியாக வரிந்து கட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் விமர்சித்து பகிரங்கமாக பேசிக்கொண்டார்கள், குழாயடி சண்டை தோற்று போய்விடும் அளவுக்கு கச்சேரி களை கட்டியுள்ளது


 


ஒரு வழியாக கடைசியில் அக்டோபர் 7 ம்தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவது என்று வாய்தா வாங்கி அறிவித்து கூட்டம் முடிந்துள்ளது. தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன, மக்களின் வாழ்வியல் நிலைமை மிக மிக மோசமானதாக மாறியிருக்கிறது, அதை பற்றியெல்லாம் பேசாமல் ஒருவருக்கொருவர் பதவிக்காக பகிரங்கமாக மோதிக்கொண்டது வெட்டவெளிச்சத்திற்கு வந்திருக்கிறது,


 


மோடியின் தயவில் தான் இவர்களது ஆட்சி நடக்கிறது, இந்த மூன்றரை ஆண்டுக்காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கியிருக்கிறது, இவர்களது ஆட்சியில் ஒரு விஷயம் ஜரூராக நடந்திருக்கிறது என்றால் அது ஊழலும் மெகா ஊழலும் தான் இந்த லட்சணத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டுமென்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது, ஏதோ 2021 ஆம் ஆண்டில் அதிமுக வெற்றி பெறப்போவது போலவும் அதற்கு யார் தலைமை தாங்குவது என்று போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள், எந்த இருண்ட உலகத்தில் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் இமாலயத்தோல்வியை அடைந்தவர்கள், நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள சட்டபேரவைக்கு காலியாக இருந்த 21 தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இருந்த 13 இடங்களை இழந்தார்கள்,. உள்ளாட்சித்தேர்தலை சாக்குபோக்கு சொல்லி நடத்தாதவர்கள் உச்சநீதிமன்ற கண்டிப்பான தீர்ப்புக்கு பின்னர் உள்ளாட்சித்தேர்தலையாவது உருப்படியாக நடத்தினார்களா தெரியவில்லை \மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்தது அதிமுக இந்த நிலையில் 2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் தேர்தல் என்றாலே தொடை நடுங்கும் அதிமுக முதல்வர் வேட்பாளர் போட்டியில் சிக்கியுள்ளது உலக மகா வேடி்க்கை என்று அவர் தெரிவித்துள்ளார் ,