korona

 ஊரடங்கு உத்தரவு மேலும் 15 நாட்கள் நீடிப்பு


ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறப்பு 


தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு மேலும் 15 நாட்கள் நீடிக்கப்படும் என்றும் பள்ளிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்றும் தெரிகிறது, 


தமிழ்நாட்டில் கடந்த 24 ம்தேதி முதல் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது, வரும் மே 31 ம்தேதி நள்ளிரவு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது, இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில்  மருத்துவ நிபுணர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 


இந்த ஆலோசனையில் சென்னை நிலவரத்தை பொறுத்து மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, பள்ளிகள் திறப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும் விரிவான ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார், இந்த ஆலோசனையில் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மாதத்தில் பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,