நாங்கள் உங்கள் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்,
லடாக் எல்லைப்பகுதியில் சீனப்படையினருடன் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, 1969 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற சம்பவத்தில் முதன்முதலாக அதிக எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் மடிந்துள்ளனர், தமிழகத்தை சேர்ந்த பழனி என்ற வீரரும் இதில் உயிர்தியாகம் செய்துள்ளார் . எல்லையில் நடைபெற்ற இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது, இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாவது நாளாக கொரோனா குறித்து பிரதமர் நடத்திய வீடியோகான்பிரன்சிங்கில்தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் அப்போது சீனாவுடன் நடந்த சம்பவத்தை மேற்கொள் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தருணத்தில் நாங்கள் உங்களோடு ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று உருக்கத்துடன் தெரிவித்தார்,