தந்தை மகன் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம்

கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிஸ்  குடும்பத்திற்கு  தலா ரூ 10 லட்சம் உதவித்தொகையும்  தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், 


இது குறித்து விரிவான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பென்னிஸ் மூச்சுத்திணறல் காரணமாகவும் அவரது தந்தை ஜெயராஜ் உடல் நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடுவர் மன்றத்தின் அறிக்கை அடிப்படையிலும்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார், மேலும் இறந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னீஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் முதல்வர் தெரிவித்துள்ளார், இறந்த இருவருடைய குடும்பத்திற்கும் தலா ரூ 10 லட்சம் உதவித்தொகையும்  அரசு விதிமுறைப்படி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் பேரில் அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்றும்அறிவித்துள்ளார்,