குவியும் பாராட்டு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில்  சாதாரண மக்கள் முதல் பாலிவுட் கோலிவுட் நடிகர்கள் வரை  போலீசாரை கண்டித்த வண்ணம் இருக்கின்றனர், இன்னொரு பக்கம் சென்னையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது, சென்னை ஒட்டேரி எஸ்.வி.எம் நகரை சேர்ந்த 57 வயதான  பெண் ஒருவர்   உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்,  குப்பைகள் சேகரிக்கும் தொழில் செய்து  நடைபாதையில் வாழ்ந்து வந்த அந்த பெண்ணின்  பிணத்தை நெருங்கவே பலர் பயந்தனர், ஒரு வேளை கொரோனா நோய்த்தோற்றாக இருக்குமோ என்ற அச்சமே அதற்கு காரணமாக அமைந்தது, இந்த தகவல் அயனாவரம் தலைமை செயலக குடியிருப்பு  ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு தெரியவந்தது, அடுத்த நிமிசம் காவல்துறையினரோடு புயலாக புறப்பட்டவர், நடைபாதையில்  அழுகிய உடலாய் கிடந்த  பெண்ணின் பிணத்தை அலங்காரம் செய்து மயானம் வரையில் இறுதி சடங்குகளை  நடத்தி வைத்தார், பெண் காவல் ஆய்வாளரின் இந்த செயல் ஒட்டேரி மக்களை மட்டும்ல்ல: மனிதநேயம் உள்ள அனைவரையும் நெகிழ வைத்தது,  இன்று தலைமை செயலக குடியிருப்பில்  கொரோனா ஆய்வுக்கு வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பொன்னாடை அணிவித்து பாராட்டினார்,