சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு
சென்னை செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வரும் 19 ம்தேதி முதல் முழு ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், இந்த நான்கு மாவட்டங்களிலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்,
இந்த உத்தரவின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் அதிகாலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கலாம், தேநீர் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய தேவைகள் மற்றும்
மருத்துவ காரணங்கள் தவிர மற்றவற்றிற்கு ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது, நோய்க்கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கும் பகுதிகளில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 19 ம்தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பெறும் குடும்பஅட்டைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,