தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர், இவர்களில் ~13 பேர் பெண்கள், 12பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்,தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 479 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 382 ஆகும் இன்று ஒரே நாளில் இதுவரையில்லாத அளவுக்கு 18 ஆயிரத்து 403 பேருக்கு மருத்துவமனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் 1,843 பேர் தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1,257 . இன்று 797 பேர் நோய் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்து 344 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், இந்தியாவிலேயே கொராேனா நோய்ப்பாதிப்புடையவர்கள் தமிழகத்தில் தான் அதிகளவில் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது, தற்போது தமிழகத்தில் 15 ஆயிரத்து 385 பேர் நாேய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்,
ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலி