தமிழகத்தில் கொராேனா நோய்த்தொற்று காரணமாக ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 16 பேர் பெண்கள், இதுவரை 528 பேர் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, சென்னையில் மட்டும் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 422 பேர், தமிழகத்தில் நோய்த்தொற்றால் இன்று ஆயிரத்து 515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 48 ஆயிரத்து 19 பேருக்கு நோய்த்தாக்கம் இருப்பதாகவும் தற்போது 20 ஆயிரத்து 705 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் 26 ஆயிரத்து 782 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 565 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவம் தற்போது 15 ஆயிரத்து 257 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது,
கொரோனா நோய்த்தொற்றுக்கு இன்று பலி- 49