சென்னை மாநகராட்சி சார்பில் அதன் 15 மண்டலங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவரும் விடுபடாமல் சிகிச்சை மேற்கொள்வதற்காக நடமாடும் சிகிச்சை முகாமை தமிழக அரசு கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தது, சுமார் 203 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 10 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பெற்றனர், இந்த மருத்துவ பரிசோதனையில் 392 பேருக்கு காய்ச்சல்இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு குணப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள்வழங்கப்பட்டன, தற்போது கொரோனா நோய்த்தொற்றில் டாப் மண்டலமாக திகழும் ராயபுரத்தில் 65 இடங்களில் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டன இதில் 3048 கலந்துகொண்டனர், இவர்களில் 199 பேருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன, தண்டையார் பேட்டையில் 19 இடங்களில் நடத்தப்பட்டமுகாம்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 137 பேருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன, தனியார் மருத்துவமனைகளை தேடி போக முடியாத ஏழை எளியவர்களுக்கு இந்த முகாம்கள் பெரிதும் பயன் உள்ளதாக அமைந்தன
காெரோனா பாதிப்பு பகுதிகளில் நடமாடும் மருத்துவமுகாம்கள்
• ராயபுரம் ரவுண்டப்