முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கொரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவ பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொண்டதாகவும் அதில் அவருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்திருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்,
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தியாவிலேய அதிக அளவிலான சோதனைகள் தமிழ்நாட்டில் தான் நடந்திருப்பதாகவும் மகாராஷ்ட்ராவில் கூட நம் மாநிலத்தை போன்ற பரிசோதனைகள் நடக்கவில்லை என்று தெரிவித்தார், தமிழகத்தில் நோய்க்கான பரிசோதனைகள் அதிகம் நடத்தப்படுவதால் நோய்பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்ற தோற்றம் ஏற்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார், ஆனாலும் மாநில அரசு எதிலும் வெளிப்படையாக இருக்கிறது, எதையும் மறைக்கவில்லை. என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார் என்றும் அந்த பரிசோதனையில் அவருக்கு நோய்ப்பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,