மதுரை மாநகராட்சியில் முழு ஊரடங்கு

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25 ம்தேதி முதல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது, இந்த நிலையில் சென்னையில்  கடந்த 19 ம்தேதி முதல் 30 ம்தேதி வரை  மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா ஊரடங்கு வெற்றிகரமாக கடைபிடிக்கப்பட்டது, இதற்கிடையில் வரும் 24 ம்தேதி அதிகாலை முதல் 30 ம்தேதி வரை  மதுரை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார், இந்த ஊடகங்களில்  காய்கறி கடைகள் மளிகைக்கடைகள் அதிகாலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும் தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆட்டோக்கள் டாக்சிகள் இயக்கப்பட மாட்டாது என்றும்  அவசர மருத்துவ சேவைக்காக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார், வரும் ஞாயிற்றுக்கிழமை ( 28 ம்தேதி )  தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும்  தலைமை செயலாளர் சண்முகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்,