சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கே.பிரகாஷ் அறிவித்துள்ளார்,
காய்ச்சல், கர்ப்பகால பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் 680 இடங்களில் நாள் தோறும் நடத்தப்படும்,என்றும் இந்த முகாம்கள் இன்று முதல் தொடங்கப்பட்டு நடந்து வருவதாகவும் இந்த முகாம்களில் எவருக்கேனும் கொரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர் என்றும் முகாம்களில் கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார், சென்னை மாநகராட்சி சார்பில் 400 மருத்துவமுகாம்களும் 140 ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் 280 மருத்துவமுகாம்களும் நாள் தோறும் நடத்தப்படும் என்றும் இதில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று்ம மாநகர மக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்,