தந்தை மகன் மரணத்திற்கு எதிராக கடை அடைப்பு

; சாத்தான் குளத்தில்  ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைத்திருந்த  ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகியோரின் கடைகளை மூட செய்வதில் காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது, இதில் வாக்குவாதம் முற்ற இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர், இந்த நிலையில் ஜெயராஜ் நெஞ்சுவலியில் உயிரிழந்தார், அவரை தொடர்ந்து அவரது மகன் பென்னிஸ்சும்  மரணமடைந்தார், இது சாத்தான் குளம் வணிகர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சாலை மறியல் போராட்டங்கள் வெடித்தன, இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி பேச்சுவார்த்தை நடத்தி வணிகர்களிடையே சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார், இதன் எதிரொலியாக சாத்தான் குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள், ரகு கணேஷ்  பாலகிருஷ்ணன் ஆகியோர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர், போலீசார் அனைவரும்  பணிமாற்றம் செய்யப்பட்டனர், 


இந்த சம்பவம் குறித்து  தமிழக டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு அளித்த திமுக மகளிர் அணி செயலாளரும்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் போதாது என்றும்  காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர், திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுசெயலாளர் வைகோ வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிமராஜா உள்ளிட்ட தலைவர்கள் தந்தை மகன் மீதான  அத்துமீறலை  கண்டித்துள்ளனர்,. இந்த சம்பவத்தை கண்டித்து  வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் வெள்ளையன் நாளை தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார், இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல: தமிழகம் முழுவதும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது,