சாத்தான் குளம் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது என்று நடிகை பிரியங்கா சோப்ரா ஆவேசமாக தெரிவித்துள்ளார்,
சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் தொடர்பாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , தமிழக போலீசார் செய்தது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள அவர், அந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன், கோபமடைந்தேன் சோகமானேன் என்று கூறியுள்ளார்,என்ன குற்றமானாலும் இநத மிருகத்தனம் நடந்திருக்கக்கூடாது என்று பதிவிட்டிருக்கும் பிரியங்கா, இந்த குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்,
தமிழ்த்திரையுலகின் சின்ன கலைவாணர் விவேக், ஒரு குறைந்தபட்ச குற்றத்திற்கு மரணம் தான் தண்டனையா என்று கேள்வி எழுப்பியுள்ளார், தங்கள் குடும்பம் உயிர் பற்றி கவலையில்லாமல் கொரோனா காலத்தில் கடமையாற்றும் காவல்துறைக்கு இந்த களங்கம் வரலாமா சாத்தான் குளம் வற்றலாம் நீதிக்குளம் வற்றலாமா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார், நீண்ட நாட்களுக்கு கலையுலகம் பொங்கியிருப்பது பெரும் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது,