சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கும் வகையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி , அவர்களுக்கு ஆதரவாக முகக்கவசத்தில் வாசகங்களை பொறித்துள்ளார்,
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், இவருடைய தொகுதியில் தந்தை மகன் இறந்த சாத்தான்குளமும் அடங்கியுள்ளது, தந்தை மகன் உயிரிழப்பை தொடர்ந்து அவர்களது குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ 25 லட்சம் நிதி உதவி வழங்கினார், இப்போது கனிமொழி திமுக வண்ணத்தில் முகக்கவசம் அணிந்துள்ளார், அதில் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்ற வாசகம் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது,. தமிழில் தான் வாசகங்கள் இடம் பெறவில்லை என்று இனிமேல் யாரேனும் கேட்கக்கூடும் இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தின்காரணமாக சாத்தான் குளம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நீதி வழங்கும் அரசியல் துணிவும் முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருந்தால் உயிர்களை பறித்த காவலர்கள் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்,
இரு அப்பாவிகள் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் அவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்,