தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து வரும் 29 ம்தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
கொரோனா நோய்த்தொற்று பரவல் நீடித்து வருவதால் தமிழகத்தில் வரும் 30 ம்தேதிக்கு பின்னர் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்து பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்து வருகின்றன, இது குறித்து விடையளித்த முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை ( நாளை ) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார், மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவிக்கும் கருத்துக்கள், மத்திய அரசு அறிவிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஊரடங்கு நீடிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார், மேலும் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக எந்த வருவாயும் இலலை என்றும் மாதந்தோறும் ரூ 14 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் ஆண்டுக்கு ரூ 85 ஆயிரம் கோடி வரை இழப்பு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,