கொரோனா நோய்த்தொற்று தடுப்புப்பணியில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனும் அரசுடன் இணைந்து பணியாற்றலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார்,
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து களப்பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், கொராேனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள வித்தியாசம், நாம் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றும் கேரளம் ஆயுர்வேதத்தோடு அலோபதியை சேர்த்துக்கொள்கிறது என்றும் தெரிவித்தார் . மேலும் கேரளத்தில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் நோய்த்தொற்று தடுப்பில் ஆளுங்கட்சியோடு முழுமையாக ஒத்துழைக்கிறது என்றும் தமிழகத்தில் முழு சுமையையும் ஆளுங்கட்சியே சுமக்கிறது என்று வேதனையுடன் கூறினார்,. தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் எங்களோடு இணைந்து பணியாற்ற எந்த தடையும் இல்லை இங்குள்ள எம்எல்ஏவும் அரசுடன் சேர்ந்து பணியாற்றலாம் என்று அவர் கூறினார், அமைச்சர் பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அமமுக பொதுசெயலாளர் தினகரன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,