கொரோனாவுக்கு பலியான மற்றொரு திமுக விஐபி

 


சென்னை மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அண்மையில் காலமானார், இதைத்தொடர்ந்து திமுகவின் முன்னாள் செயலாளர் பலராமன் அதே கொரோனா நோயால் உயிரிழந்திருப்பது அக்கட்சியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, ஒருங்கிணைந்த வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் பலராமன் , மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, துறைமுகம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக இருந்தபோது அதன் பகுதி செயலாளராக இருந்தவர் பலராமன், கருணாநிதியால் பலே ராமன் என்று அழைக்கப்பட்ட பலராமன் ஒருங்கிணைந்த வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் , மத்திய கூட்டுறவு வங்கியின் முனனாள் தலைவராகவும் திமுக தணிக்கைக்குழு உறுபபினராகவும் பணியாற்றினார், 


சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த பலராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு ஆளானார், இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார், பலராமன் நோய்த்தொற்றால் மரணமடைந்ததைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, 


பலராமனின் மறைவுக்கு மாவட்ட செயலாளரும்  எம்எல்ஏவுமான சேகர்பாபு இரங்கல் தெரிவித்துள்ளார், பலராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்வகையில்  மூன்று நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று திமுக கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்,