கடவுளுக்கு தான் தெரியும்

கொரோனா எப்போது முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  கூறினார்


சென்னை வேளச்சேரி  குருநானக்  மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படும் மையங்களை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார், அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது  கூறுகையில் ஒரு மருந்தும் கண்டுபிடிக்காத நிலையிலும் மருத்துவ நிபுணர்கள்,  உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை  ஆலோசனையின்படி தமிழ்நாட்டு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை வழங்கி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட  30 ஆயிரம் பேரை குணப்படுத்தியிருக்கிறார்கள் என்று மருத்துவர்களை  பாராட்டினார், , 


கொரானா நோய்த்தொற்று எப்போது முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அது  கடவுளுக்கு தான் தெரியும்  நோய்த்தொற்றை படிப்படியாக தான் குறைக்க முடியுமே தவிர , முழுமையாக ஒழிக்க முடியாது என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி நோயை குணப்படுத்த ஒரு வழி நம்மை கட்டுப்படுத்த கொள்ள வேண்டும் என்பது கேட்டுக்கொண்டார், மேலும் , பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார், , மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,