சென்னை மெகாசிட்டி காவல்துறையில் 731 காவல்துறையினர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர் இவர்களில் 231 பேர் குணமடைந்தனர், அதே போல் மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளியும் பூரண குணமடைந்து பணிக்கு திரும்புவார் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர், அவரது சிகிச்சைக்காக2.25 லட்சம் மதிப்புள்ள மருந்தையும் சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தருவித்திருந்தார். பாலமுரளியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது, காவல்துறையினர் மகிழ்ந்திருந்த நேரத்தில் உடல் நலம் குன்றத்தொடங்கியது கிண்டி ஐஐடி மகாநதியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார், பாலமுரளியின் மறைவு காவல்துறைக்கு பெரும் துயரத்தை கொடுத்திருக்கிறது,சென்னையில் நேர்மையான இன்ஸ்பெக்டராக , சக காவல்துறையினருடன் அன்பாக பழகும் மனிதராக பாலமுரளியை இழந்து விட்டோம் என்று போலீசார் கண்ணீர் மல்கினர்,
பாலமுரளியின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரங்கல் தெரிவித்துள்ளார், பாலமுரளியின் உடல் சென்னை தி.நகர் கண்ணம்மா மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது 21 குண்டுகள் முழங்க இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்ககு போலீஸார் மரியாதை செலுத்தினர், சென்னையில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, இந்த பலி, அனைத்து துறைகளிலும் கடைசி பலியாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்போம்,