சென்னை மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வரும் 5 ம்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில் , சென்னை மதுரை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 5 ம்தேதி வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது, அதைத்தொடர்ந்து மதுரையில் கடந்த 24 ம்தேதிக்கு முன்பிருந்த ஊரடங்கும் சென்னையில் கடந்த 19 ம்தேதிக்கு முன்பிருந்த ஊரடங்கும் வரும் 6 ம்தேதி முதல் ஜூலை மாதம் 31 ம்தேதி நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நாட்களில் காய்கறிக்கடைகள் மீன்கடைகள் கோழி இறைச்சிக்கடைகள் சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படும்,
வழிபாட்டுதலங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் சுற்றுலாதளங்கள் வணிக வளாகங்கள் பள்ளிகள் கல்லுாரிகள் கல்வி நிறுவனங்கள் விமானப்போக்குவரத்து மெட்ரோ ரயில் மற்றும் ரயில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் திரையரங்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடைகள் நீடிக்கும், ஜூலை 5 , 12,19 மற்றும் 26 தேதிகளில் ( ஞாயிற்றுக்கிழமைகளில் ) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
மாநிலத்தில் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வரும் ஜூலை 1 ம்தேதி முதல் 15 ம்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும், திருமண விழாக்கள் மற்றும் இறுதி சடங்குகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், அந்தந்த மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் சென்று வரலாம் வெளிமாநிலங்களுக்கு செல்லவும் அங்கிருந்து தமிழகம் வரவும் மாவட்டங்களுக்குள் செல்லவும் இ பாஸ் அவசியம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்த நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீதம் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 80 பேர் சென்று வரலாம் தனியார் நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் செயல்படலாம்
உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உட்கொள்ளலாம் குளிர் சாதன வசதியிருந்தால் அவை நிறுத்தப்பட வேண்டும், தே நீர் விடுதிகள் மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும், வாடகை மற்றும் டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து மூவர் செல்லலாம், ஆட்டோக்களில் ஒட்டுனர் தவிர்த்து இருவருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படு்ம் குளிர் சாதன வசதிகள் இல்லாமல் முடித்திருத்தகங்கள் மற்றும அழகு நிலையங்கள் செயல்படலாம்,
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய ஷோரூம் ( நகைக்கடைகள் ஜவுளிக்கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்கப்படலாம், பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, , , ,