ஜெ.ஆர்.கே. என்று ஐஏஎஸ் வட்டாரத்தில் அன்பாக அழைக்கப்படும் ஜெ.ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்,கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார், இதைத்தொடர்ந்து அவர் ஏற்கனவே கூடுதலாக வகித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான பணிந்திர ரெட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக மட்டுமில்லாமல் சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் திறம்பட செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது,
இதற்கிடையில் சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணியில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார், இவர் ஏற்கனவே பணியாற்றி வரும் நில நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் க,சண்முகம் அறிவித்துள்ளார்,