மககள் சீனத்தின் மண்ணாசை

 மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல லடாக் விவகாரத்தில் சீன இந்திய பிரச்னை முடிந்து விடும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் இன்னமும் வெடித்தபடியே இருக்கிறது, சமரச பேச்சு நடத்தி விட்டு சீனா தனது துருப்புகளை குவித்தப்படி இருக்கிறது,  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இலலை: இந்தியா சீனா இரண்டும் அறிவுஜீவிகளின் தேசமாக இருந்து வந்தது, யுவான் சுவாங் சீனாவில் இருந்து இந்தியா வந்தார். ;சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹசன் சிங் என்ற அறிஞர் வந்தார், ., நம்நாட்டின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் சீன பேரறிஞர்கள் வந்து இந்தியர்களுக்கு கற்பித்தார்கள், தமிழ்நாட்டு மாமன்னன் ராஜராஜ சோழனும் கூட  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  தனது கலை பண்பாட்டு தூதுக்குழுவை சீனாவுக்கு அனுப்பி வைத்தான், அங்கு வணிக பரிமாற்றங்களும் மேற்கொண்டதாக வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன, சீனா தேசத்தின் மீது இந்தியர்கள் கொண்ட நட்புக்கும் அனுதாபத்திற்கும் காரணம் , அந்நாடும் இந்தியாவை போல பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ்  அடிமைப்பட்டு கிடந்தது தான், ஒரு அடிமை மற்றொரு அடிமையை கண்டு அனுதாபப்பட்டது போல் இந்தியாவும் சீனாவை கண்டு பரிதாபப்பட்டது, 


சீனத்தில் நடைபெற்ற புரட்சி மாவோ தலைமையிலான மக்கள் சீனம் எழுச்சி ஆகியவை உலகத்தை புரட்டிப்போட்டன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் மீண்ட மக்கள் சீனம், இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும் என்று தான் அரசியல் ராஜதந்திரிகள் கணித்தனர்,  ஆனால் இமாலய பகுதியான திபெத்தை  சீனா வளைத்தது, தலாய்லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார், . அடுத்து இந்தியா எல்லைகளை குறி வைத்த சீனா சிக்கிமை தனது வரைப்படத்தில் பதிவு செய்து பகையை உருவாக்கி கொண்டது, பாகிஸ்தானின் குவாடார் நகரில்  புதிய துறைமுகத்தை உருவாக்க அனுமதி பெற்றது,  இது இந்தியாவின் எல்லையோர பகுதிகளை வளைக்கும் எதிரிக்கு எதிர் நண்பன் என்ற விதையை போடும் முயற்சியாக அமைந்தது,ஸ


அடுத்தது இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள ஹம்பந்தோட்டு துறைமுகத்தை விரிவுப்படுத்த சீனா தாராளமான பொருளாதார உதவிகளை வழங்கியது, விளைவு  ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்த இலங்கை அந்த துறைமுகத்தை போர்டு ஹோல்டிங்ஸ் என்ற சீன பகாசுர நிறுவனத்திற்கு  99 வருட குத்தகைக்கு தாரை வார்த்து விட்டது,  இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக வர்ணிக்கப்பட்ட நேபாளத்தை விட்டு சீண்டி பார்த்தது சீனா ,இதன் காரணமாக நேபாளம் தனது இந்திய எல்லையோர பகுதிகளையெல்லாம்  தனது வரைப்படத்தில் சேர்த்து  சீனாவின் பேராசைக்கு தூபம் போட்டிருக்கிறது,


iஹாங்காங், தைவான், திபெத், என்று தனது  பேராசைகளை விரிவுப்படுத்திக்கொண்ட , , இப்போது  பாகிஸ்தானில் இலங்கையில் துறைமுகங்களை ஏற்படுத்திக்கொண்டு வருவது,  அசாதாரணமான நிகழ்வுகளாக ராஜதந்திரிகள் கருதுகின்றனர்,     இதன் மூலம் இந்தியாவின் எல்லையோர   அருணாசல பிரதேசம்,. சிக்கிமை வளைக்க போடும் பிளான் தான்  கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் பழைய கனவுகளுக்கு அடிபோட்டது என்கிறார்கள்,  1960 லடாக் பள்ளத்தாக்கின் ஒருபகுதிக்கு அடி போட்டு ஆக்ரமித்த சீனா 1962 ஆம் ஆண்டு நேரு தலைமையில் நாடு திருப்பி அடித்ததால் அடங்கி போனது, இதுவரை சீனா கிட்டதட்ட 650 முறைகள் தனது ஊடுருவலை முயற்சித்திருக்கிறது,


இப்போது லடாக் எல்லையில் 20 ராணுவ வீரர்கள்மீது சீனா தாக்குதல்  நடத்தி விதிமுறைகளை மீறி செய்த கொலைக்குற்றம் சர்வதேச நாடுகளின் மீது இந்தியாவுக்கு அனுதாபத்தை சேர்த்திருக்கிறது,  ஏற்கனவே  கொரோனா வைரஸ் விவகாரத்தில் நோய் பரவல் தகவலை தாமதப்படுத்தியதால் அமெரிக்காவின் கோபத்திற்கு சீனா ஆளாகியுள்ளது,இதனால் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே அமெரிக்கா அழைக்கத்தொடங்கியுள்ளது, வூகானில் இருந்து பரவிய கோவியட் 19  வைரஸ் உலகம் முழுக்க சீனாவின் மீது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, அதே போன்ற கோபத்தை தணிக்க  சீனா தனது  மண்ணாசை கனவுகளை  நிறுத்தினால் தான்  சர்வதேச நாடுகளின் வைரஸ் பழியிலிருந்து தப்பிக்க முடியும், அதுவரை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சந்தித்து திருவிழா   நடத்தியதெல்லாம்  சிறிது நேர மத்தாப்பாக தான் இருக்கும்