ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன், கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளார், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார், இந்த நிலையில் இன்று அதிகாலை வேல்முருகனின் உயிர் பிரிந்தது, அவரது மனைவியும் இதே மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருவது தான் பெரும் சோகம், 45 வயதான வேல்முருகன், கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழ் ஊடகத்துறையில் முதல் பலியாக மாறியுள்ளார்,இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று பத்திரிகையாளர்களும் ஊடகத்துறையினரும் கண்ணீரோடு வேண்டிக்கொண்டிருக்கின்றனர்,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோரும் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சேர்ந்தவர்களும் வேல்முருகனின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்திருக்கின்றனர், பத்திரிகையாளர்களும் ஊடகத்துறையினரும் இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில் தங்களது உடல் நலத்தில் தனிகவனம் செலுத்த வேண்டு்ம் என்றும் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்,