சென்னையில் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிவோரை கண்காணிக்க ட்ரோன் காமிராக்கள் பயன்படுத்தப்பட்டு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்
இது குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியதாவது நாளை முதல் வரும் 30 ம்தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது, ஊரடங்கின் போது ஆட்டோக்கள் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படாது, மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வாகனங்களை இயக்கலாம், காய்கறிக்கடைகள் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும்,தேநீர் கடைகள் திறக்கப்படக்கூடாது, அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய அவசியமிருந்தால் மக்கள் வசிப்பிடங்களில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்ல வேண்டும்,
மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீதம் வரை இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது, அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோர் அதற்கான அனுமதிச்சீட்டை சட்டையில் அணிந்திருக்க வேண்டும், தேவையில்லாமல் சுற்றி திரிவோர் ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் வெளியில் சுற்றுவோர் மீது அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அண்ணா சாலை, கடற்கரை காமராஜ் சாலைகள் மூடப்படும், சென்னையில் 288 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ,இ.பாஸ் இல்லாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், போலி இ பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னையில் முகக்கவசம் இல்லாமல் செல்வோரை பிடிக்க காவல் நிலையங்கள் தோறும் தலா இரண்டு தனிப்படைகள் அமைக்கப்படும் என்று மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்,