சிபிஐ விசாரணை


சாத்தான் குளம் \ தந்தை மகன்  உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், 


சாத்தான் குளத்தை சேர்ந்த செல்போன் வணிகர்கள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர்  ஊரடங்கு நேரத்தில் கடைகளை திறந்து வைத்ததால்  போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி சிறையில்  அடைக்கப்பட்டனர், இதில் ஜெயராஜிம் அவரது  மகன் பென்னிக்சும் அடுத்தடுத்து இறந்தனர், போலீசாரின் அத்துமீறல் காரணமாக தான்  இருவரும்  உயிரிழந்ததாக  கூறி மாநிலம் முழுவதும் வணிகர்கள் இன்று இரண்டாவது நாளாக கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்  இந்த சம்பவத்தில்   இளம் நடிகர் ஜெயம் ரவி, சூரியா, விவேக், உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கள் மட்டுமல்ல:  பாலிவுட் நடிகர்களும் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர், .நடிகர் ரஜினிகாந்த் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார், , , ,


இந்த நிலையில் சாத்தான்குளத்தில்  தந்தை மகன்  உயிரிழப்பு தொடர்பாக   சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அனுமதிகோரப்பட்டு இந்த விசாரணை மத்திய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்