தம்பிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தந்த பிறந்த நாள் பரிசு

தனது தம்பி எல்வினை கதா நாயகனாக அறிமுகப்படுத்தி பிறந்தநாள் பரிசாக   ராகவா லாரன்ஸ் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 


இது குறித்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் இன்று எனது தம்பி எல்வினின் பிறந்தநாள் அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஆச்சரியமூட்டும் விஷயங்களை செய்வது என்னுடைய வழக்கம்: சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தம்பியின் கனவு , ,  இந்த பிறந்தநாளில் அவர் கனவு நனவாக போகிறது, நல்ல திரைக்கதை அமைந்துள்ளது, ராகவேந்திரா புரெடக்சன் தயாரிக்கும் படத்தில் அவர் தான் கதாநாயகனாக நடிக்க போகிறார், ராஜா என்பவர் அந்த படத்தை இயக்க இருக்கிறார், கொரோனா காலம் முடிந்த பின்னர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றார், அவர்