எல்லைகளை பாதுகாப்பதில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்று அதிமுகவும் திமுகவும் உறுதியளித்துள்ளன,இந்திய எல்லையான லடக்கில் சீனாவுடன் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர் இதைத்தொடர்ந்து எல்லையில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது, சீனா தனது படைகளை பலப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜின் பிங் பேசத்தொடங்கியுள்ளார், இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டமொன்றை இன்று கூட்டினார்.
இதில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காணொளி மூலம் கலந்துகொண்டார் அப்போது அவர் பேசுகையில் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதிலும் தேசத்தை காப்பதிலும் பிரதமருக்கு பின்னால் பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் இந்திய அரசின் பின்னால் தமிழகமும் அதிமுகவும் உறுதியுடன் நிற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்
இந்த கூட்டத்தில் வீடியோகான்பிரன்சிங் மூலம் பங்கேற்ற எதிர்க்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எல்லை பிரச்னையில் இந்தியநாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க பிரதமர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணையாக இருககும் என்று உறுதியளித்துள்ளார்.