எம்எல்ஏ மரணம் : ஸ்டாலின் மீது பாய்ச்சல்

 திமுக தலைவர் ஸ்டாலினின் தவறான வழிகாட்டுதல் காரணமாக  ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்


, கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பி்ன்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவினரும் அமைச்சர்களும் இரவுபகலாக சொந்த பணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்கள்,  ஆனால் திமுகவினர்  நிவாரணம் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் மருத்துவ நிபுணர்கள் தேவையில்லாமல் நிவாரணம் வழங்கினால் நோய்த்தொற்று பரவும் என்றும் அதிகாரிகளின் உதவியோடு வழங்கினால் நோய்த்தொற்று பரவாது என்று தெரிவித்தனர், 


ஆனால் ஸ்டாலின் அதை பொருட்படுத்தாமல் நீதிமன்றம் சென்று தீர்ப்பை பெற்று நிவாரணம் வழங்கினார், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் நிவாரணம் வழங்கியதால் கோவையில்  500 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது  மு.க.ஸ்டாலின் ஆணையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிவாரணம் கொடுத்தார், அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவ நிபுணர்கள் சொன்ன கருத்தை கேட்டிருந்தால்  ஒரு சட்டமன்ற உறுபபினரை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர்  எடபபாடி பழனிசாமி தெரிவித்தார், ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்கள், அறுவை சிகிச்சை  செய்து கொண்டவர்கள் ரத்தகொதிப்பு உள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் மற்றும் புற்றுநோயாளிகள்,\ வெளியில் செல்ல வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தினார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தக்க ஆலோசனை சொல்லாமல்  நிவாரண நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று சொன்னதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி  குற்றம் சாட்டியுள்ளார்