மதுரையிலும் வீடுதேடி ஆயிரம் ரூபாய்

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், 


தலைமை செயலகத்தில் மாவட்ட கலைக்டர்களுடான வீடியோகான்பிரன்சிங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 19 ம்தேதி முதல் 30 ம்தேதி வரை 12 நாட்கள் முழு ஊடங்கு அறிவிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுன் பஞ்சாய்த்து மதுரை கிழக்கு மதுரை மேற்கு  மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் கடந்த 24 ம்தேதி அதிகாலை முதல்  வரும் 30 ம்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கினால் மக்கள் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க  குடும்ப அட்டை தாரர்களுக்கு  சென்னையை போல மதுரையிலும்  தலா ஆயிரம் ரூபாய் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார், 


அதே போல மண்டலங்களுக்குள்ளான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்றும்  தனியார் போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள, முதல்வர் வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மட்டும்  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரும் இ பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளார்,