கொரோனா நோய் பற்றி ஜெ. அன்பழகன்
கடைசி நேர உருக்கமான பேட்டி:
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் பிறந்தநாளே மறைந்த நாளாக மாறியுள்ளது, கொரோனா நோய்த்தொற்று குறித்து ஜெ. அன்பழகன் அண்மையில் தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அது நோய் பற்றிய அவரது புரிதலை தெரிவித்துள்ளது, இருப்பினும் நோய்த்தொற்றுக்கு இந்தியாவில் முதல் பலியான சட்டமன்ற உறுப்பினர் அவர் ஒருவரே என்பது கண்ணீர் மல்க வைக்கும் தகவல்
கொரோனா நோய்த்தொற்று விசயத்தில் மக்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் தலைவர்கள் சொல்வதை கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
தனித்திருக்க வேண்டும், விலகியிருக்க வேண்டும் வீட்டிலிருக்க வேண்டும் என்று தலைவர்கள் சொல்வதை கடைபிடிக்க வேண்டும், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களை 20 நாட்களுக்கு விடவே விடாது. நாம் 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் அப்போது தான் கொரோனா நோய்த்தொற்றின் தன்மை என்ன என்பது நமக்கு தெளிவாக தெரியும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது எனவே சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டு்ம, அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்களை எளிதில் தாக்கும் சக்தி கொண்டது இந்த நோய், என்னை கூட அடிக்கடி வெளியே போக வேண்டாம் என்று டாக்டர் எச்சரித்துள்ளார், நானும் டாக்டரின் எச்சரிக்கையை கடைபிடித்து தினமும் 1 மணிநேரம் மடடுமே வெளியே சென்று வீடு திரும்பி விடுவேன்
முன்பெல்லாம் வெளிநாட்டுக்கு போவது ஒரு பெருமையாக இருந்தது இப்போது இரண்டு வருடத்திற்கு யாரும் வெளிநாட்டுக்கு போக முடியாது சர்வதேச விமானங்களே இன்னும் 1 வருடத்திற்கு இயங்காது போலிருக்கிறது,
இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக இருமல் தும்மல் இருப்பவர்களிடம் சற்றுத்தள்ளியே இருக்க வேண்டும், சமூக இடைவெளியையும் தனிமையையும் கடைபிடிக்க வேண்டும்,. வரும் மே 3 ம்தேதி லாக் டவுன் முடிகிறதோ இல்லையோ அதற்கு பிறகும் நாம் தனிமையை கடைபிடிக்க வேண்டும், ஆறு மாதத்திற்கு முகக்கவசங்களை அணிய வேண்டும் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொண்டால் கொரோனா நம்மை நெருங்காது என்று அன்பழகன் தெரிவித்துள்ளார், அவரது இந்த வேண்டுகோள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மறைந்த அன்பழகன் தனது கடைசி பேட்டியிலும் அது குறித்த விழிப்புணர்வூட்டியுள்ளது திமுகவினரை மட்டுமல்ல: பல்வேறு கட்சியினருக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது,