புலம்பெயர்ந்த தொழிலாளர்களால்
தமிழகத்தில் பலமிழந்த தொழில்கள் :
தமிழகத்தில் கிட்டதட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்த நிலையில் , கொரோனா கொண்டாட்டம் போட்ட ஊரடங்கு நேரத்தில் பலர் வயிற்றுப்பசியை தீர்க்க வாய்ப்பில்லாமல் சொந்த மாநிலங்களுக்கே திரும்பி விட்டார்கள், கட்டிடத்தொழிலில் இருந்த 28 லட்சம் தொழிலாளர்களில் வாரியத்தில் மறுபதிவு செய்த ஏழரை லட்சம் பேருக்கே நிவாரணம் கிடைத்தது, அதில் இடம் பெறாத புலம்பெயரும் தொழிலாளர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. பலர் வாரியத்தில் உறுப்பினர்களாக கூட ஆக்கப்படவில்லை.
இந்த நிலையில் இப்போது ஊரடங்கில் கட்டிடத்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு தளர்வை அறிவித்துள்ளது, 50 சதவீத தொழிலாளர்களுடன் தொழிலை தொடங்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, இப்போது மெல்ல மெல்ல கட்டுமான தொழில்கள் தொடங்கியிருக்கின்றன, ஆனால் கொத்தனார்கள் சித்தாள்கள், மேஸ்திரிகள் என்று கட்டிடத்தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பீதி இன்னும் குறையவில்லை. , வயிற்றுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும் உயிர் பயம் மறு பக்கம், அதனால் தொழிலுக்கு வரவே பயப்படுகிறார்கள், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான கட்டிடத்தொழிலாளர்கள், இந்த தொழிலின் சிக்கல்கள் தெரிந்து வேறு பக்கம் போய்விட்டார்கள், வாரிசுகள் பல பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு போய்விட்டதால் கட்டிடத்தொழிலில் கல்லுடைக்க யாரும் இல்லை, எனவே ஆபத்பாந்தவர்களாக கருதப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் , காணவில்லை நம்ம ஊர் முதலாளிகள் கொடுத்தது போதாதால் , இலவச ரயிலில் ஒரு வாரம் காத்திருந்து கிளம்பி விட்டார்கள், அதனால் கட்டிடத்தொழிலில் பெரும் திண்டாட்டம், ஓட்டல்களிலும் சப்ளையர் வேலை பார்த்தவர்களை இப்போது காணவில்லை, முடித்திருத்தங்களில் இருந்தவர்கள் கூட மாயமாகி விட்டார்கள். கட்டிடத்தொழிலில் ஓட்டலில் முடித்திருத்தகங்களில் இருந்து சொந்த ஊருக்கு போனவர்கள் திரும்பி வருவார்கள் என்று அந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் சொல்கிறார்கள் இது குறித்து கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் பொதுசெயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில் சொந்த ஊரில் சரியான வருமானம் இல்லையென்பதால் தான் புலம்பெயரும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டை தேடி வந்தார்கள், அவர்களுக்கு வாரியம் அமைத்து நிவாரணம் எதையும் தமிழக அரசு தரவில்லை. முகாம்களில் இருப்பவர்களுக்கு தான் பசிக்கு சோறு கிடைத்தது.எல்லோருக்கும் கிடைக்காததால் சொந்த ஊர் திரும்பினார்கள், கொரோனா காலம் முடிந்தால் கண்டிப்பாக மீண்டும் வருவார்கள் ஆனால் எப்போது முடியும் என்று தெரியவில்லை. ,என்று வேதனையுடன் தெரிவித்தார்,