முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் ராமதாஸ் வலியுறுத்தல்

முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தாலும் தவறில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை


சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது   தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது,  வெளியில் வந்தால் முகக்கவசம் அணிந்து தான் வரவேண்டும், என்று தமிழக அரசு மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி விளம்பரம் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட அதை பெரும்பான்மை மக்கள் பொருட்படுத்தாதது  மிகவும் வருத்தமளிக்கிறது, சென்னையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் சுதந்திரமாக  நடமாடுவதை  அதிகமாக  பார்க்க முடிகிறது,குறிப்பாக இரவு நேரங்களிலும் சென்னை மக்கள்  கூட்டம் கூட்டமாக நடமாடுவது வாடிக்கையாகி விட்டது, 


சென்னையில் முகக்கவசம் இல்லாமல் செல்வோரிடம்  500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும்  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை, அதனால் அபராதத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்,