கொரோனா நோய்த்தொற்று வைரஸ் நான்கைந்து மாதத்தில் வீரியம் இழந்து விடும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்,
திருவொற்றியூர் மண்டலத்தில் நோய்த்தொற்று குறித்து ஆய்வு நடத்திய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் இதனை தெரிவித்தார், அவர் கூறுகையில் , கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நான்கைந்து மாதங்களுக்கு தான் வீரியத்துடன் இருக்கும் அதற்கு பின்னர் இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கும் செய்தி ஆறுதல் அளிப்பதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்,
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பின்னால் வரிசையாக மாநகராட்சி அதிகாரிகள் படையெடுத்து செல்வதால் மருந்து அடிக்க கூடிய நிலை இல்லையே என்று நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நோயின் கண்டறிதல் நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்தல், சிகிச்சையளித்தல் போன்ற பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன, 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு நிலையிலும் நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறார்கள், அதில் குற்றம் சொல்ல முடியாது குறை காண முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார், அதில் குறையிருந்தால் சுட்டிக்காட்டத்தான் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், எந்த அதிகாரி மீது குறையிருநதாலும் சுட்டிக்காட்டலாம் தவறுகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்,
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் ரகசியம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விடையளிக்கையி்ல் விடுமுறை காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவுக்கு மக்களை தயார்படுத்த வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், நோய் கண்டறிதல் , சிகிச்சையளித்தல் குணப்படுத்தல் போன்றவற்றிற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார், மேலும் சென்னையில் காய்ச்சல் கிளினிக் மூலம் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் பயன்பெற்றிருப்பதாகவும் 15 ஆயிரத்து 199 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு 3 ஆயிரத்து 199 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறினார் இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதோடு உயிரிழப்பு தவிர்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்,