; வெறிச்சோடிய சென்னை

முழு ஊரடங்கு உத்தரவையொட்டி செனனை மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடியது 


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ள சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்  கடந்த 19 ம்தேதி முதல் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இந்த ஊரடங்குநாட்களில் காலை 6 மணி முதல் பகல் 2மணிவரை காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் திறந்திருக்கலாம் என்றும் மருத்துவ அவசரத்திற்கான தேவைகள் அத்தியாவசிய பொருட்களான வாகனங்கள் தவிர மற்றவற்றிற்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டது, இதையடுத்து 21 மற்றும் 28 தேதிகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அனுஷ்டிக்கப்படு்ம என்று தெரிவிக்கப்பட்டது,.  இதன் படி கடந்த 21 ம்தேதி தளர்வில்லாத முழு ஊரடங்கு முழுமையாக செயல்படுத்தப்பட்டது, அன்று காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை கடைகள் மூடப்பட்டன, வாகனங்கள் இயக்கப்படவில்லை, , இதே தளர்வில்லாத முழு ஊரடங்கு 28 ம்தேதியும்  கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ,


அதே போல மதுரை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த 24 ம்தேதி முதல் 30 ம்தேதி வரை 7 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இன்று தளர்வில்லாத முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது, இதையொட்டி சென்னை மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  , வாகனங்கள் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதால் முற்றிலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன