வானதி பாராட்டு: வரதராஜன் வருத்தம்
அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக பாஜக தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் தனக்கு பாராட்டு தெரிவித்தார் என்றும் தவறான செய்தி வெளியிட்டதற்காக தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வருத்தம் தெரிவித்தார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
அவர் மேலும் கூறுகையில் ஓமந்துாரா் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரை சேர்க்கவேண்டும் என்று வானதி சீனிவாசன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார், அந்த நபருக்கு மருத்துவமனையில் படுக்கை ஒதுக்கி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரமேஷ் வானதி சீனிவாசனுக்கு பதில் அனுப்பியிருந்தார், இதைத்தொடர்ந்து வானதி எனக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் கேள்வி கேட்பவர்கள் அதையும் சொல்லுங்கள், என்று பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் தன்னை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்,