தமிழக அரசு திணறவில்லை திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி, விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 210 நாடுகள் விழிபுதுங்கி தவித்துக்கொண்டிருக்கிறது நம்மை விட வல்லரசு நாடுகள் திணறுகிறது, , தமிழக அரசு சரியானநேரத்தில் முன்கூட்டியே நோயை கண்டறிந்து கண்ணுக்கு தெரியாத வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது, . இதுவரை நாம் 25 ஆயிரம் பேரை குணப்படுத்தியிருக்கிறோம்: இதில் தமிழக அரசு திணறுகிறது, என்று ஸ்டாலின் சொல்வது தவறான வார்த்தை தமிழக அரசு திணறவில்லை. திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது,,
இந்த பணியில் ரிஸ்க் இருக்கிறது என்று தெரிந்தும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவல்துறையினர் உயிரை துச்சமென கருதி துணிச்சலாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள், நோய் மிகுந்த தெருக்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் பணியாளர்கள் துணிச்சலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், உயிரை துச்சமாக கருதி துணிச்சலாக களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களை என்றைக்காவது மு.க.ஸ்டாலின் பாராட்டியிருக்கிறாரா என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்,