temple

கோவில்கள் திறப்பு  நாளை ஆலோசனை 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு 


தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  கடந்த மார்ச் 24 ம்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதில் கிட்டதட்ட  70 நாட்களுக்கும் மேலாக  பள்ளிகள் கல்லுாரிகள் மூடப்பட்டன, தியேட்டர்கள்  மற்றும்  சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது,  வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லவும்  பக்தர்களுக்கு   அனுமதி மறுக்கப்பட்டது, ரம்ஜான் பண்டிகையையொட்டி  ஒரே ஒரு நாள் தொழுகை செய்ய இஸ்லாமியர்கள், தமிழக அரசை வலியுறுத்தி பார்த்தனர், அரசு கருணை வைக்கவில்லை. 


இந்த நிலையில் ஊரடங்கு வரும் ஜூன் 30 ம்தேதி வரை தளர்வுகளுடன் தொடரும் என்று மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்திருக்கின்றன, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8 ம்தேதி கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து கிரீ்ன் சிக்னல் காட்டியுள்ளார். இந்த நிலையில்   இந்து முஸ்லீம் கிறித்துவர் மற்றும் சீக்கிய மதத்தலைவர்களுடன் நாளை மாலை தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார் .இதில் முகக்கவசம், அணிவது, சமூக இடைவெளியுடனும் சானிடைசர் வகையறாக்களுடன்  வழிபாட்டுத்தலங்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது, அதைத்தொ்டர்ந்து நாளையோ வேறொரு நல்ல நாளிலோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது,அப்படியே பேருந்துகளை இயக்கினால் நன்று என்கிறார் ஒரு பக்த கோடி