கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதிச்சடங்கில்
பிரார்த்தனைக்கு அனுமதியுங்கள்: கிறிஸ்தவர்கள் உருக்கம்
கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதிச்சடங்கில் பிரார்த்தனை செய்ய பாதிரியார்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் கிறித்துவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்,
ஆன்லைன் தரிசனம்
தமிழகத்தில் கொரோனா பீதியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதன் காரணமாக கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும மூடப்பட்டன, கிட்டதட்ட 66 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன, மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இந்த நிலையில் கோவில்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது, இதன் அடிப்படையில் தமிழக அரசு,மதத்தலைவர்களின் நேற்று ஆலோசனை நடத்தியது தலைமை செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமயத்தலைவர்கள் பங்கேற்று பேசுகையில் தற்போதைய கொரோனா பீதியில் கோவில்களை இன்னும் ஒரு மாதத்திற்கு திறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர் . கோவில்களை திறந்தால் பக்தர்கள்் வெள்ளமென திரண்டு வரக்கூடும் சமூக இடைவெளி பின்பற்றப்படுமா என்ற அச்சம் இருக்கிறது, நோய்த்தொற்று ஆபத்து ஏதும் வந்து விடக்கூடாது என்று தெரிவித்தனர், சிலர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்றும் ஆனால் பஜனைகள் செய்யவும் உட்காரவும் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்,
கொரானா இறப்புக்காக பிரார்த்தனை
இஸ்லாமியர்கள், தங்களது மசூதிகளில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு குழுக்களாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர், ஆற்காடு நவாப் மற்றும் தமிழக அரசின் தலைமை காஜிகள் , வேண்டவே வேண்டாம், நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதால் ஒரு மாதத்திற்கு தொழுகையை ஒரு மாதத்திற்கு தள்ளி வையுங்கள் என்று யோசனை தெரிவித்தனர் இதற்கிடையில் கிறிஸ்தவர்கள், கொரோனா நோயாளிகள் உயிரிழந்தால் அவர்களை தங்களிடம் ஒப்படைப்பதில்லை இருப்பினும் அவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்ய ஒரு பாதிரியாரையாவது அனுமதிக்க வேண்டும் என்றும் தேவாலயங்களில் சமூக இடைவெளியுடன் 25 பேர் புடை சூழ திருமணங்கள் நடத்தி வைக்க அனுமதியுங்கள் என்றும் வலியுறுத்தினர் அத்தனையும் கருணையுடன் கேட்டுக்கொண்ட தமிழக அரசு அதிகாரிகள், வரும் 8 ம்தேதிக்குள் முடிவு வரும் .சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அந்த முடிவு சாதகமாக அமையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்