கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கை வரவேற்பதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார், இது குறித்து கருத்து தெரிவித்த வடசென்னை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ராபர்ட் , ராயபுரம் மண்டலத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, ராயபுரம் மண்டலம் என்பது சிந்தாதிரிப்பேட்டையை தாண்டியும் இருக்கிறது என்றாலும் கொரோனா நோய்த்தொற்றால் ஒரு உயிரும் இழக்கப்படக்கூடாது என்பது வணிகர்களின் நோக்கமாகும் பொதுமக்களில் ஒரு அங்கம் தான் வணிகர்கள், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைபிடித்தல் தனிமைப்படுத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், நோய்த்தொற்று இல்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த ஊரடங்கை வரவேற்பதாக ராபர்ட் தெரிவித்தார்,
முழு ஊரடங்கு உத்தரவுக்கு வரவேற்பு