சிஐஏ ஊட்டி வளர்த்த வானொலிகள்

ரேடியோ ப்ரி ஐரோப்பா இப்படியொரு வானொலி  1950 ஆம் ஆண்டுகளில் தனது ஒலிபரப்பை தொடங்கியது,  பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி , போலந்து மற்றும் செக்கோஸ்லவியோ ஆகிய நாடுகளை மையமாக கொண்டு தான் இந்த வானொலியின் ஒலிபரப்புகள் அமைந்தன, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், ரேடியோ லிபர்ட்டி, அப்போதைய சோவியத் யூனியனின் மாநிலங்களில் சுமார் 15 மொழிகளில் வானொலி ஒலிபரப்பை தொடங்கியது. 1975 ஆம் ஆண்டுகளில் ரேடியோ ப்ரி, ரேடியோ லிபர்ட்டி ஆகியவை தங்களது ஒலிபரப்பு எல்லைகளை , எஸ்டோனியா,லாட்வியா மற்றும் லிதுவேனியா வரை விரிவுப்படுத்தின,   அல்பேனியன், அரபிக், ஆர்மேனியன், லிதுவேனியன் ஹங்கேரி, ரோமானியன், ரஷ்யன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த இரண்டு வானொலிகளும் மக்கள் மத்தியில் தங்களது சாம்ராஜ்யத்தை நடத்தின  


இந்த இரு வானொலிகளுக்கும்  அமெரிக்காவின்  உளவு நிறுவனமாக சிஐஏ தான் ஆரம்பத்தில் நிதி உதவியை வழங்கி ஊக்குவித்தது,சிஐஏ மட்டுமில்லாமல் சில தனியார் அமைப்புகளும் பின்னணியில் இருந்து பொருளாதார  ரீதியில் உதவிகளை தாராளமாக வழங்கின, சிஐஏ நிதி வழங்கியது சர்ச்சையில் சிக்கவே அந்த உதவிகள் நிறுத்தப்பட்டன, அதன் பின்னர் சர்வதேச ஒலிபரப்புக்கான வாரியம் , புராட்காஸ்டிங் போர்டு ஆப் கவர்னெஸ் மூலமாக அமெரிக்கா வேறு வழிகளில்  உதவிகளை வாரி வழங்கியதாக கூறப்படுகிறது, 


1976 ஆம் ஆண்டுக்கு பின்னர், ரேடியோ ப்ரி ஐரோப்பா, ரேடியோ லிபர்ட்டி ஆகியவை தனித்தனி நிறுவனங்களாக இருந்த கதை  முடிந்தது, ஒரே நிறுவனமாக மாறியது, இந்த இரு வானொலிகளும் எந்த நாட்டில் புரட்சியை ஊக்குவிக்கவில்லை என்றும் ஒரு பக்க சார்பான செய்திகளை வழங்கவில்லை என்றும் அப்போது பெரிதாக விளக்கங்கள் கூறப்பட்டன இந்த வானொலிகள்  உள்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்  மதம் அறிவியல் விளையாட்டு செய்திகளையும் மேற்கத்திய இசையையும் ஒலிபரப்பி வந்தன, இந்த வானொலிகளுக்கு  அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ  தாராளமாக நிதி வழங்கியது ஏன் என்று கேள்விகள் எழுந்தன,,


1968 ஆம் ஆண்டுகளிலும் 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் புரட்சிக்கு பின்னர் உருவான  நாடுகளின் கதை முடிக்க அந்த நாடுகளில் தலைவர்களானவர்களுக்கும்  கம்யூனிச அதிருப்தியாளர்களுக்கும் தான்  இந்த வானொலிகள் சேவகம் செய்தன என்று அன்றைக்கும்  குற்றம்சாட்டுக்கள் எழுந்தன, அமெரிக்கா பற்ற வைத்த தீக்கு பேர் தான் ரேடியோ லிபர்ட்டி,  ரேடியோ ப்ரி ஐரோப்பா என்று இன்றைக்கும் இடதுசாரிகள் அடித்து சொல்கின்றனர்