தமிழகம் முழுவதும் நாளை தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
உலகம் முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரும் கொரோனா நோய்க்கு ஆளாகியுள்ளனர், ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர், நோய்ப்பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் 6 வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கடந்த ஜூன் 19 ம்தேதி முதல் 5 ம்தேதி வரை சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, மதுரை மாநகராட்சியிலும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளிலும் கடந்த ஜூன் 24 ம்தேதி முதல் \ஜூலை 5 ம்தேதி வரை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது., இதனை தொடர்ந்து, ஜூலை 5 ம்தேதி மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது நோய்த்தொற்றை தவிர்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,இதனை தொடர்ந்து நாளை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது, தளர்வில்லாத முழு ஊரடங்கைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளனர், இன்று மாலை முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும், இதில் அவசர மருத்துவ தேவைக்கான வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு அனுமதிக்கப்படும் என்றும் பொதுப்போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மருந்துக்கடைகள் அதிகாலையில் பால் கடைகள் திறக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது,
இதற்கிடையில் சென்னை தலைமை செயலகம் இன்றும் நாளையும் மூடப்படுகிறது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைமை செயலகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இரண்டு நாட்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்காக மாதந்தோறும் இரண்டாவது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தலைமை செயலகம் மூடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் வரும் ஜூலை 14 ம்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது, இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் சென்னையில் கொரோனா நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் ஆயிரக்கணக்கானவர்கள் குணமடைந்து வருவதாலும் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் மற்ற மாவட்டங்களில் நோய்பரவல் அதிகரிப்பதால் அதற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,