கமல்ஹாசன் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரிக்கும் சூழ்நிலையில்  மருத்துவரை சந்திக்காமல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார், நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பலர் மருத்துவரையும் பார்க்க முடியாமல் நோய்த்தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி படுத்திக்கொள்ள முடியாமல் பதட்டத்தில்  வாழும் நிலை ஏற்பட்டுள்ளதையும்  அரசு கவனிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார், கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் அனுமதி  சீட்டுக்காக காத்திருக்காமல் நேரடியாக  ஆய்வகங்களை பரிசோதனைக்காக  அணுகலாம்  என்று அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்


மேலும் ஆய்வகங்களிலோ மருத்துவமனைகளிலோ மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க ,  கொரோனா பரிசோதனைகளை ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்புடன் வீடுகளுக்கு சென்று ஆய்வுகள்  மேற்கொள்வதை தொடங்க வேண்டும் என்றும் அதன்மூலம் நோய்த்தொற்று இல்லாமல் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு ஆய்வகங்களில்  காத்திருக்கும் போது   தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார், இந்த பரிசோதனையின் கட்டணத்தை குறைத்து கடந்த மாதமே டெல்லி அரசு அறிவித்தது, அதை விட கட்டணத்தை குறைப்பை தமிழகத்தில் மேற்கொண்டால்  மக்களின் உயிர்காப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இல்லாமல் செய்திட முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்,