அக்டோபர் 1 ம்தேதி முதல் நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அத்தியாவசிய பொருட்கள் பெற்று கொள்ளும் வகையிலான ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை பாண்டிபஜாரில் உள்ள பூ அங்காடிகளுக்கு சென்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முகக்கவசங்களை வழங்கினார், அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகம் முழுவதும் 71 ஆயிரம் பேர் புதிய குடும்ப அட்டைகளுக்கு வி்ண்ணப்பம் செய்து உள்ளனர், , அவர்களுக்கும் குடும்ப அட்டைகள் அக்டிவேட் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார், , அக்டோபர் 1 ம்தேதி முதல் தமிழ்நாட்டில் ஒரே நாடு,ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது, ரேஷன்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பதால் பலர் அந்த தொழிலை விட்டு ஓடி விட்டார்கள் என்று அமைச்சர் காமராஜ் பதிலளித்தார்,